பதிவு செய்த நாள்
27
ஏப்
2022
03:04
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, பறவைக் காவடி பால் குட ஊர்வலம் நடந்தது.
கடந்த, 13ம் தேதி விழா துவங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு, மூன்று வேளைகளிலும் அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, நாயுடு சமுதாய மக்கள் சார்பில், பறவைக் காவடி பால்குடம் ஊர்வலம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து, பறவைக் காவடி ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக, பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர். பகல், 12:00 மணிக்கு, ஊர்வலம் மாரியம்மன் கோவிலை அடைந்தது. அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.