மயிலாடுதுறை : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு நேற்று மாலை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகை தந்தார் அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதீன கட்டளை மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றார் தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற சசிகலா கோ பூஜை கஜ, பூஜை செய்த பின்னர் கள்ள வாரண விநாயகர், சுவாமி, காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். பூஜைகளை கணேச குருக்கள் தலைமையிலான செய்து வைத்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அமிர்தகடேஸ்வரர் சுவாமி தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர். முன்னதாக சசிகலா கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.