ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 08:04
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் எப்போது துவங்கும் என பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.
17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான இக்கோயிலில் கடந்த 2003 மார்ச் 30ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஹிந்து ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது 19 வருடங்கள் கடந்தும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை.
சிதிலமடைகிறது: திருப்பணிகள் நடக்காததால் கோயில் பல இடங்களில் கட்டுமான பணிகள் சேதமடைந்துள்ளன. மூலஸ்தான கோபுரத்தை சுற்றி அரச, ஆழ மரங்கள் வளர்ந்துள்ளது. கோயிலின் பழமையான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தும், கருங்கற்கள் பெயர்ந்து விழ துவங்கியுள்ளன. கோயிலின் உட்பிரகாரம் பராமரிப்பின்றி எலிகள் உலா வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. கும்பாபிஷேக பணிகளை ஹிந்து அறநிலையத்துறை உடனே துவக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இணை ஆணையர் குமரதுரை: பழமை மாறாமல் கோயில் திருப்பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.