சித்திரை விழாவில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 10:04
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோவில், சித்திரை விழா, ஏப்ரல் 20ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து தினமும், கோவிலில் பறை முழக்கம் செய்யப்பட்டு வந்தது. விழாவின் ஆறாம் நாளில், கோவிலிலிருந்து வடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வடத்தை, ஊரின் நடுவில் உள்ள, அரச மரத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவின் கடைசி நாளான நேற்று, விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று கோவிலின் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக எருதுகட்டு விழா நடைபெற்றது.