பதிவு செய்த நாள்
28
ஏப்
2022
11:04
உடுமலை : உடுமலை அருகே தளியில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, கடந்த, 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து விநாயகர் பொங்கல், கம்பம் போடுதல், திருவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருமூர்த்திநகரிலிருந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர்; பூவோடு எடுத்தும், அம்மனை வழிபட்டனர். இன்று மாலை, 4:00 மணிக்கு, அம்மன் திருவீதியுலாவும், நாளை, (29ம் தேதி) அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.