திருப்புத்துார் மாணிக்கநாச்சியம்மன் கோவிலில் சித்திரை ரத ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 10:04
திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ரத ஊர்வலம் கோயிலுக்கு திரும்பியது.இக்கோயிலில் சித்திரைதிருவிழா பத்துநாட்கள் நடைபெறும்.
ஏப்.,19ல்காப்புக் கட்டி விழா துவங்கியது. தினசரி காலை கேடகத்தில் அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்திருவிழாவை முன்னிட்டு ரதத்தில் காலை 8:15 மணி அளவில் அம்பாளும், விநாயகரும் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் அம்பாளுக்கும், விநாயகருக்கும் அர்ச்சனை செய்து வழிப்படனர்.பக்தர்கள் வடம் பிடித்து ரத ஊர்வலம் தெற்குப்பட்டு மூலஸ்தானத்தை அடைந்தது. நேற்று காலை கண்டரமாணிக்கம் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக தெற்குப்பட்டு மூலஸ்தானத்திற்கு வந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் மூலஸ்தானத்திலிருந்து தேர் திரும்பி கோயில் வந்தடைந்தது. கற்பக விருட்ச அலங்காரத்தில் அம்பாள் வீதி வலம் வந்தார்.