பதிவு செய்த நாள்
28
ஏப்
2022
03:04
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, வல்லப்பாக்கம் பகுதியில், வடிவாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கு, தனித்தனி மண்படம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இதன் கும்பாபிஷேக பெருவிழா நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு, கோ பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை நடந்தது. காலை 9:50 மணிக்கு கலச புறப்பாடு முடிந்து, 10:15 மணிக்கு ஐவர் மண்டபத்திற்கு சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தார். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பொதுமக்கள், சுவாமியை வழிபட்டனர்.