பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
10:04
பல்லடம்: பல்லடத்தில், உலக நன்மை வேண்டி, வாழும் கலை சார்பில், திருவிளக்கு வழிபாடு நடந்தது.
பல்லடம் வாழும் கலை அமைப்பின் சார்பில், பி.எம்.ஆர்., திருமண மண்டபத்தில் திருவிளக்கு வழிபாடு நேற்று நடந்தது. வாழும் கலை சார்பில் குரு ரஞ்சித் திருவிளக்கு வழிபாட்டை நடத்தினார். ஆசிரியர் சம்பத்தின் சத்சங்கம் நடந்தது. முன்னதாக, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால், பூஜையில் பங்கேற்றவர்கள், 1,008 முறை ஓம் நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபடி திருவிளக்கு வழிபாடு செய்தனர். கொரோனா நோய் ஒழியவும், மழை பெய்யவும், உலக அமைதி வேண்டியும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. பெண்கள், தாய்மார்கள், சிறுவர் சிறுமியர் என, 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.