விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை (30ம் தேதி) சித்திரை கரகம் வீதியுலா நடைபெற இருப்பதால், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை திருவிழா நடக்கிறது. இதில், பக்தர்கள் அதிகளவு பங்கேற்று, ஊஞ்சல் உற்சவ சேவையை கண்டு மகிழ்வர். நாளை (30ம் தேதி) இரவில் சித்திரை கரகம் வீதியுலா நடைபெற இருப்பதால் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.