Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருத்தினி ஏகாதசி: சிறப்பும் ... அங்கப்பிரதட்சிணம் செய்யும் போது ...
முதல் பக்கம் » துளிகள்
குருநாதரும் கடவுளும் ஒன்று
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
11:05

கணேச சர்மா

ஆந்திராவிலுள்ள தெனாலியைச் சேர்ந்த தம்பதிகள் சூரிபாபு, சீதம்மா. இவர்கள்  அடிக்கடி திருவண்ணாமலைக்கு சென்று ரமண மகரிஷியைத்  தரிசிப்பர். இதற்கிடையில் ஒருமுறை காஞ்சி மஹாபெரியவர் ஆந்திராவிலுள்ள நெல்லுாருக்கு யாத்திரையாக வந்தார். அவரை தரிசிக்க வந்த போது, தங்களின் வீட்டிற்கு சுவாமிகள் வந்தருள வேண்டும் என பலமுறை கேட்டனர். ‘‘இதற்கு என்னிடம் பதில் இல்லை’’ என்றார் பெரியவர். ‘‘எல்லாம் கடவுள் செயல். அவரது விருப்பத்தை யாரால் அறிய முடியும்? விருப்பு வெறுப்பு அற்றதாக மனதை வைத்திருக்க வேண்டும்’’ என விளக்கம் அளித்தார். மூன்று வாரங்கள் கடந்தன. திடீரென ஒருநாள் அதிகாலையில் சீதம்மாவின் வீட்டிற்கு மஹாபெரியவர் வந்தார். திக்குமுக்காடி போனார் சீதம்மா. பாதபூஜை செய்ய விரும்பிய சீதம்மாவிடம், தன் பாதுகைகளைக் கொடுத்து பூஜை செய்ய உத்தரவிட்டார்.  
இதே போல மற்றொரு நிகழ்வாக ஒருநாள் சீதம்மா கனவு கண்டார். அதில் ரமணர் நிற்பது போலவும், அவரது முகம் எங்கும் அம்மை கொப்பளம் இருப்பது போலவும் இருந்தது. அதற்கான பலன் என்ன என்பதை அறிய விரும்பினார். அந்த சமயத்தில் செம்மங்குடி என்னுமிடத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்கு சென்ற போது அம்மை, காய்ச்சலால் மஹாபெரியவர் அவதிப்படுவதைக் கேள்விப்பட்டனர். இதன் மூலம் ‘ஞானிகள் இருவரும் ஒருவரே’ என்னும் உண்மையை உணர்ந்தனர். கனவு பற்றி  தெரிவித்தபோது மஹாபெரியவர் புன்னகைத்தார்.  
ஒருமுறை கணவருடன் சீதம்மா காஞ்சிபுரம் மடத்தில் தங்கியிருந்தார். அங்கு சூரிபாபுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆதிசங்கரர் படம் ஒன்றை அவரிடம் மஹாபெரியவர் கொடுத்து அதை ஏந்தியபடி பின்புறமாக நடந்து செல்லுமாறு கட்டளையிட்டார். சிறிது துாரம் நடந்து விட்டு வந்தார். காய்ச்சல் விலகியது. ஞானிகளின் வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் நமக்குத் தான் நன்மை என்பதற்கு இந்நிகழ்ச்சி உதாரணம்.
ஒருமுறை சிவன் கோயிலுக்கு தம்பதிகள் சென்றனர். அங்கிருந்த சிலை ஒன்றை நந்திகேஸ்வரர் எனக் கருதி நுாறு தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொண்டனர். இது குறித்து சொன்ன போது அந்த கோயிலில் நந்திகேஸ்வரர் சன்னதி இல்லை என்றும், வேறொரு கோயில் ஒன்றைக் குறிப்பிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அங்கு சன்னதி திறக்கும் என்றும் மஹாபெரியவர் தெரிவித்தார். நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாதோ என அவர்கள் வருந்திய போது, ‘‘கவலை வேண்டாம். நுாறு தேங்காய்களை என் முன்னர் உடையுங்கள். நேர்த்திக்கடன் நிறைவேறி விடும்’’ என்றார்.  குருநாதரும் கடவுளும் ஒன்று என்பதை உணர்ந்து தேங்காய்களை உடைத்தனர். அந்த குருநாதரின் அருட்பார்வை கிடைக்க நாமும் பிரார்த்திப்போம். 

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar