Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ்: கிறிஸ்து பிறப்பின் ...
முதல் பக்கம் » துளிகள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: தெய்வீக குழந்தையை நம்பிக்கையுடன் வரவேற்போம்; மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: தெய்வீக குழந்தையை நம்பிக்கையுடன் வரவேற்போம்; மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!

பதிவு செய்த நாள்

25 டிச
2025
10:12

வரவேற்போம்: கன்னி மரியாளிடம் உன் வயிற்றில் பிறக்கும் குழந்தை இம்மானுவேல் (தேவன் நம்மோடு இருக்கிறார்) என அழைக்கப்படும் என்றார் வானதுாதர் கப்ரியேல். அதாவது ஆண்டவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை நமக்கு அவர் தருகிறார். அதனால் தெய்வீக குழந்தையை நம்பிக்கையுடன் வரவேற்போம்; மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.


யார் துணை: இங்கிலாந்தில் பெண் ஒருவர், அனாதை விடுதி கட்ட இடம் வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்தார். அவரோ பாறை நிறைந்த இடம் ஒன்றை கொடுக்க ஏற்பாடு செய்தார்.இது தேவனின் செயல் என நம்பிய அந்தப்பெண் இதில் கட்டடம் கட்ட ஆகும் செலவை நினைத்து மலைத்துப் போனார். இந்நிலையில் காண்ட்ராக்டர் ஒருவர் தான் கட்டடத்தை கட்டித் தருவதாக அவரிடம் கூறினார். மேலும் அவர், நான் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு கல் தேவைப்படுகிறது இந்த பாறையை உடைத்து கல்லை எடுத்துக் கொள்கிறேன். அதற் ஈடாக விடுதி கட்டித் தருவதாக சொன்னார். அதன்படி கட்டியும் கொடுத்தார். ஆண்டவரே துணை” என்கிறது பைபிள்.


நம்பிக்கை நட்சத்திரம்: மனிதர்களின் பாவங்களை போக்க மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தார். அவரின் பிறப்பை வெளிஉலகிற்கு சொன்னவர்கள் ஆயர்கள். அதை கேட்ட யூதர்கள் நாம் விடுதலை பெற நம்பிக்கை நட்சத்திரம் வந்து விட்டது என மகிழ்ந்தனர். இதனால் நற்செய்தியை அறிவிப்பதில் ஆயர்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. மேய்ப்பர்களை முன்மாதிரியாக கொள்ளுங்கள் என்கிறது பைபிள்.


மிட்நைட் மாஸ்: இயேசுவை வரவேற்க ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை நள்ளிரவில் நடக்கும். இதில் குழந்தை இயேசுவின் முன்னிலையில் நற்செய்தி வாசிக்கப்படும். இதை மிட்நைட் மாஸ் அல்லது தேவதைகளின் திருப்பலி எனச் சொல்வர். அப்போது பாட்டு பாடியும், இனிப்பு வழங்கியும் மகிழ்வர்.


குழந்தை மனம்: ஏழை, பணக்காரர்,படித்தவர், படிக்காதவர், பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஆண்டவரின் குழந்தைகளே. குணத்திலும் குழந்தையாக வாழ்ந்தால்தான் விண்ணரசில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். கள்ளம் இல்லாத மனம், அன்பால் அரவணைக்கும் குணம் யாரிடம் உள்ளதோ அவரே குழந்தை மனம் கொண்டவர். இந்த குணம் இல்லாவிட்டாலும் அப்படிப்பட்ட மனதை தர வேண்டும் என ஆண்டவரிடம் பிரார்த்திப்போம்.


உதவி செய்தால்...: சொற்பொழிவாளர் ஸ்பர்ஜன் லண்டனில் அனாதை விடுதி நடத்தி வந்தார். பிரசங்கத்திற்காக தனக்கு கிடைக்கும் பணத்தை இதற்கு பயன்படுத்தினார். ஒருமுறை பிரிஸ்டல் நகரத்திற்கு செல்ல 300 பவுண்டு தேவையாக இருந்தது. அவர் நினைத்தபடி தொகையும் கிடைத்தது. அன்றிரவு கனவில், “உனக்கு கிடைத்த தொகையை அனாதை விடுதி நடத்தும் ஜார்ஜிடம் கொடு என குரல் ஒலித்தது. பணத்தை கொடுத்தால் என் தேவையை யார் அறிவார் என நினைத்தார். இருந்தாலும் கனவில் கேட்டது போல ஜார்ஜிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அவர், இப்போது தான் பணத்துக்காக நான் ஜெபம் செய்தேன்” எனச் சொல்லி மகிழ்ந்தார். தன் வீட்டுக்கு திரும்பிய போது ஸ்பர்ஜனின் வீட்டு வாசலில் கடிதம் ஒன்று கிடந்தது. அதில் தொழிலதிபர் ஒருவரின் கடிதமும், அனாதை விடுதிக்கு நன்கொடையாக 315 பவுண்டு பணமும் இருந்தது. அதைக் கண்டு நெகிழ்ந்து போனார். பிறருக்கு உதவி செய்தால் நம் தேவையை தேவன் நிறைவேற்றுவார் என்பதை அப்போது உணர்ந்தார்.


தங்கமகன்: 


தாரகை வழிகாட்ட தங்க மகனாய் பிறந்ததாலே

துாரிகை வரைந்தது போல் துாயவனாய் வளர்ந்தாரே

காரிகையாம் கன்னி மேரி கர்ப்பத்திலே மிதந்ததாலே

உலகோரின் பாவத்தையும் ஒருவனாக சுமந்தாரே

ஈகை அன்பு ஈடில்லா இரக்கமதை தந்ததாலே

பூமியிலே உயிர்களெல்லாம் புதுமை கொள்ள செய்தாரே

பாவிகள் மனந்திருந்த ஆவியை கொடுத்ததாலே

வாழ்வினிலே வீழ்ந்திடினும் வாகைசூடி சென்றாரே

நாளெல்லாம் கர்த்தாவின் திருநாமம் உரைத்ததாலேபாரினிலே பகலவனாம் இயேசு கிறிஸ்துவாய் ஒளிர்ந்தாரே - ஜி.மனோகரன்


இரவின் மடியில்...


நாட்களே வாருங்கள்; தேவன் வரவைக் கூறுங்கள்

மாந்தரே கூடுங்கள்; பாலன் உறவைத் தேடுங்கள்

பூவின் இதழைத் துாவுங்கள்; தேனின் சுவையைக் காணுங்கள்

வான துாதர் வாழ்த்த; இயேசு ஜெனித்தாரே.

ஆகாயம் பூமியில்; அன்பின் வனமாய் முளைத்ததே

ஆனந்தம் மனங்களில்; இன்ப மழையைப் பொழிந்ததே

கருணைச் சோலை விரிந்ததே; கவலை யாவும் பறந்ததே

தேவ தாயின் ஏற்பில்; மெசியா பிறந்தாரே

சூரியன் பாரினில்; பனியில் குளிரில் ஒளிர்ந்தது

ஆண்டவன் வருகையை; வானம் இசையில் மொழிந்தது

விண்மீன் குகையில் எழுந்தது; மன்னன் முகமும் மலர்ந்தது

மூன்று வேந்தர் போற்ற; தேவன் மகிழ்ந்தாரே.

தென்றலே வீசிடு; தேவன் புகழைப் பேசிடு

நாதமே பாடிடு; நாதன் அருளைச் சேர்த்திடு

மண்ணின் மரமே பூத்திடு; மைந்தன் தோளில் போர்த்திடு

தியாகம் உண்மை நீதியின்; துாதன் உதித்தாரே.

கனிகளின் இனிமையே; ஆண்டவர் விழியைப் புகழ்ந்திடு

கிளிகளின் குரல்களே; பிதாவின் மொழியை பகர்ந்திடு

அரும்பின் அசைவே தெரிந்திடு; இமையின் துடிப்பை வரைந்திடு

அலையே கரையில் எழுதிடு; ஆதியின் அழகினை

நள்ளிரவில் சூரியோதயம்

வானகம் வையம் வந்த நாளிது

பூலோகம் எங்கெங்கும் பூக்கள் பூத்தது - ஹேய்ய்ய்


வானகம் வையம் வந்த நாளிது


பூலோகம் எங்கெங்கும் பூக்கள் பூத்தது

விண்ணில் தோன்றிய வெண்ணிலா ஒன்று

மண்ணின் மீதிலே மனிதன் ஆனது

சின்ன சூரியன் வண்ணத் தாமரை

நள்ளிரவிலே மெல்லப் பூத்தது - (வானகம்)


அன்னை மேரியின் தந்தை சூசையின்

பண்பில் வளர்ந்த அன்பின் துாதுவன்

உள்ளம் ஒடிந்து தன்னை இழந்து

நின்றவர் கெல்லாம் நண்பன் ஆனவன் - (வானகம்)


பாவங்கள் விடு கோபங்கள் தணி

தேவனை நினை ஏசுவின் உரை

யாவரும் இனி ஓரினம் என

கூறிய அவன் நீதியின் மகன் - (வானகம்)


அரண்மனை பணம் அதிலில்லை வரம்

அன்பே தான் சுகம் அறியுமா மனம்

பொறாமையின் குணம் அழிவையே தரும்

பொறுமையின் கரம் அமைதியைத் தொடும்-(வானகம்)


பூமிப் பந்தினைப் புதுப்பிக்க வரும்

தேவ மைந்தனே துாய வணக்கம்

பன்னீர் தெளித்து பாசம் பொழிந்து


உன்னை அழைத்தோம் உணர்வே வருக -(வானகம்)

 
மேலும் துளிகள் »
temple news
ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் ... மேலும்
 
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
சீடர்களுடன் விருந்துக்கு சென்றார் இயேசு. அவருக்கு அருகில் உட்கார்வது யார் என சீடர்களான  பேதுரு, ... மேலும்
 
temple news
மார்கழி திருவோணம் பெருமாளை வழிபட மிக சிறந்த தினமாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட ... மேலும்
 
temple news
ஹூப்பள்ளி மாவட்டம், வெங்கடேஷ்வர் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar