Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: சேவைக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
கிறிஸ்துமஸ்: கிறிஸ்து பிறப்பின் சிறப்பு தெரியுமா?
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ்: கிறிஸ்து பிறப்பின் சிறப்பு தெரியுமா?

பதிவு செய்த நாள்

24 டிச
2025
05:12

ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்தது பற்றிய விபரம், கி.பி.,154ல் போப் ஜூலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. மாஸ் என்றால் ஆராதனை, எனவே கிறிஸ்து+மாஸ் கிறிஸ்துவின் ஆராதனையாக மாறியது. இதை எக்ஸ்மாஸ் என்றும் சொல்வர். எக்ஸ்  என்பது கிரேக்க சொல். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிசம்பர் 25ம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸை நோயஸ் என்கின்றனர்.


பிறந்த இடத்தில் சர்ச்; இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவில் பிறந்தார். இந்த இடத்தில் கடந்த 1982ல் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இதைசர்ச் ஆப் நேட்டிவிட்டி என அழைப்பர். இதைக்கட்ட 65 கோடி ரூபாய் செலவிட்டனர். எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. முழுச்செலவையும் 49 பேர் நன்கொடையாக பகிர்ந்தளித்தனர். கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு இந்த சர்ச்சை காண குவிகின்றனர்.


எக்ஸ்மாஸ் ஆனது எப்படி?: கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ல் நடத்தப்படும் என போப் ஜூலியஸ் அறிவித்தார். கிறிஸ்து+மாஸ் என்ற சொல்லே கிறிஸ்துமஸ் ஆனது. இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை எனப்பொருள். எக்ஸ்மாஸ் என்று எழுதினாலும், கிறிஸ்துமஸ் என்றே கூறவேண்டும். எக்ஸ் என்பது கிரேக்கச் சொல். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமசை நோயஸ் என்கின்றனர். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிச.,25ம் தேதியை, ஆண்டின் முதல் நாளாக்கி, கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.


முதல் கிறிஸ்துமஸ் குடில்: இயேசு கிறிஸ்து பிறந்ததை சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கும் பழக்கம் இங்கிலாந்தில் கி.பி.1722ல் புனித பிரான்சிஸ் அறிமுகப்படுத்தினார்.


கிறிஸ்துமஸ் தாத்தா: கிறிஸ்துமஸ் வந்தாலே சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவை மறப்பதில்லை. கி.பி.4ம் நூற்றாண்டில் பின்லாந்து நாட்டில் வசித்த பெரும்பணக்காரர் பிஷப் செயின்ட் நிக்கோலசை, சாண்டா கிளாஸ் தாத்தாவாக கருதுகின்றனர்.


முதல் வாழ்த்து அட்டை: இங்கிலாந்தில் 1843ல் கார்ஸ்லே என்பவர் முதன்முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரித்து, தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். தொடர்ந்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மற்றவர்களுக்கும் அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில், ஆயிரம் கோடி ரூபாய் வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைக்காக செலவழிக்கின்றனர்.


முதல் கிறிஸ்துமஸ் மரம்: இங்கிலாந்தில் கி.பி.1841ல், அல்பெர்டினால் என்ற அரசர், தனது வின்ட்சர் கோட்டையில் முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார். ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளில் மர இலைகள், மலர்களை வைத்து அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.


பாவம் போக்க .. ! பாவம் என்னும் நோயை தீர்த்து வைக்கும் பரிகாரியாக இயேசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார். கிறிஸ்து என்றால் மேசியா என்றும் தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்டஸ் மாஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து இந்த வார்த்தை பிறந்தது. கி.பி.,336ல் முதன்முறையாக ரோமாபுரியில் இவ்விழா கொண்டாடப்பட்டது. அனைத்து உயிரினங்களிலும் மனுக்குலம் மட்டுமே பகுத்தறிவு உள்ள உயிரினமாக விளங்குகிறது. பாவத்தை அறிந்தும், தெரிந்தும், அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்தும் உலகமக்கள் பாவத்தை தொடர்ந்து செய்ன்றனர். பிறக்கும் போதே மனிதனோடு பாவம் தோன்றி விடுகிறது. அதை போக்க பலவித கர்ம, தர்ம காரியங்களை செய்கிறான். ஆனால், எவ்வித பலனும் கிடைக்காமல் மீண்டும் பாவத்திலேயே நிலைத்திருக்கிறான். இந்நிலையில் கடவுள், தான் படைத்த மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க பூமியில் தோன்றினார்.

 
மேலும் துளிகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
சீடர்களுடன் விருந்துக்கு சென்றார் இயேசு. அவருக்கு அருகில் உட்கார்வது யார் என சீடர்களான  பேதுரு, ... மேலும்
 
temple news
மார்கழி திருவோணம் பெருமாளை வழிபட மிக சிறந்த தினமாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட ... மேலும்
 
temple news
ஹூப்பள்ளி மாவட்டம், வெங்கடேஷ்வர் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் ... மேலும்
 
temple news
கேரளாவின் திருச்சூர் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலக புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar