சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் ராமர் சன்னதி அமைக்க பூமிபூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2012 11:07
திருநெல்வேலி: நெல்லை சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் சன்னதிக்கு வாஸ்து பூஜை அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நெல்லை சுத்தமல்லி விலக்கு வ.உ.சி.நகரில் ஜெய்மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புதிதாக கட்டப்படவுள்ள ஸ்ரீராமர் சன்னதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஜெய்மாருதி பக்தர் பேரவை தலைவர் வக்கீல் அருள்ராஜ், ஜோதிடர்கள் வைத்தியநாதன், கோமதிசங்கர், சங்கர ஐயர், ஸ்தபதி பார்த்தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாஸ்து பூஜையை ஆர்.எஸ்.சீத்தாராம சர்மா நடத்திவைத்தார். ஏற்பாடுகளை ஜெய்மாருதிதாசன் நாராயணன் செய்திருந்தார். ராம ஜெயம் நாமங்களை ஒப்படைக்க வேண்டுகோள் பக்தர்களால் எழுதப்பட்ட கோடி கணக்கான ஸ்ரீ ராம ஜெயம் நாமங்கள் ஸ்ரீ ராமரின் பீடத்தின் அடியில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது. பக்தர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டுக்களில் ஸ்ரீ ராமஜெயம் மந்திரங்களை எழுதியவர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் பக்தர்கள் தாங்களாக எழுதிய ஸ்ரீ ராமஜெயம் மந்திரங்களையும் கோயில் வசம் ஒப்படைக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.