பொள்ளாச்சி:பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிேஷக விழா, கடந்த மாதம் நடந்தது. கும்பாபிேஷக விழாவை தொடர்ந்து, தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்றன.கோவிலில் நேற்று, 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. சிறப்பு பூஜைகள் மற்றும், 108 சங்கு அபிேஷக பூஜைகள் நடைபெற்றன.ஹிந்துசமய அறநிலையத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சீரவையாதீனம் கவுமாரமடாலயம் 4ம் பட்டம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.விழாவையொட்டி, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அமணீஸ்வரர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.