திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோடு, வாலிபாளையத்தில் உள்ள ஷீரடி சாய்பீடம் டிரஸ்டில், சிறப்பு பூஜை நேற்று நடந்தது.அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் நடத்தினர். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜை செய்விக்கப்பட்டது. மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சாய்பாபா பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா பிரசாதமாக வழங்கப்பட்டது.