தஞ்சாவூர்,- தஞ்சாவூர் அருகே, களிமேடு தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நேற்று ஆறுதல் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில், கடந்த மாதம் நடந்த அப்பர் தேர் வீதி உலாவின் போது, தேர் மீது மின்கம்பி உரசியதில், 11 பேர் இறந்தனர்.காயமடைந்த 17 பேர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.களிமேடு கிராமத்திற்கு நேற்று வந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர், விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டனர்.அப்போது, தேரில் இருந்த அப்பர் சிலையை வழிபட்டனர். பின், விபத்தில் இறந்த 11 பேரின் வீட்டிற்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.