மயிலாப்பூர்:மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவோண பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடக்கிறது. இந்தாண்டிற்கான விழா, கடந்த 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை, வெண்ணெய்தாழி கண்ணன் கோலத்தில் அருள் பாலித்தார். இன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.