பதிவு செய்த நாள்
03
மே
2022
07:05
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம், அம்மன் ஆர்ச் தாய் படவேட்டம்மன் கோவிலில், சித்திரை கத்திரி அக்னிதோஷ நிவர்த்தி வசந்த விழா இன்று நடைபெறுகிறது.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது. இதையொட்டி, காஞ்சி புரம் கலெக்டர் அலுவலகம் அருகில் அம்மன் ஆர்ச் தாய் படவேட்டம்மன் கோவிலில், அக்னிதோஷ நிவர்த்தி பூஜையும், மகா அபிேஷகமும் நடைபெறுகிறது.பகல், 12:00 மணிக்கு கூழ் படையலிட்டு, தீப ஆராதனையும், பக்தர்களுக்கு கூழ் அமுது வழங்குதலும் நடைபெற உள்ளது.மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், இரவு, 7:00 மணிக்கு கும்பம் படையலிட்டு, அம்மன் வர்ணித்து மஹாதீப ஆராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.