திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த ஒட்டம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
அரகண்டநல்லூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் பழமையான செல்வமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இரவு கரகம், சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். ஊராட்சி தலைவர் அருணா முருகன் தேரோட்டத்திற்கு வழியை சீர்செய்து முன்னின்று நடத்தினார்.