பதிவு செய்த நாள்
04
மே
2022
05:05
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் செல்லும் வழியில் பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
கடந்த மே 3., அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, கடஸ்தாபனம், பூர்ணாஹூதி, எந்திரஸ்தாபனம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 10:30 மணியளவில் மூலஸ்தானத்தில் பெரியநாயகி அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் பெரியநாயகியம்மன், வீரப்பசாமி, இருளப்பசாமி, விநாயகர், உத்தண்டராயர், வாகையடி மூர்த்தி, பெத்தாரன் சாமி, தெய்வரங்கப் பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை முத்துக்குமார குருக்கள் செய்திருந்தார். ஏற்பாடுகளை இளங்கோவன், உத்தண்டி, பெத்தபெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவர் உத்தண்டவேலு, பிரபாகர், பூபதி மற்றும் குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.