பொதுத் தேர்வில் வெற்றி பெற சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2022 05:05
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று, வெற்றி பெற வேண்டி சக்தி மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம் நடந்தது. முன்னதாக காலை, 7:00 மணிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம், மகா தீபாராதனை, திருவிளக்கு வழிபாடு ஆகியன நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.