பதிவு செய்த நாள்
05
மே
2022
10:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஆன்-லைன் மூலம் அபிஷேகம்,சேவா டிக்கெட்டுகள் மற்றும் தேவஸ்தான குடில்கள் முன்பதிவு துவங்கப்படுகிறது. சிறப்பு தரிசனம், அபிஷேகம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பெற, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, வரும் ௧௫ம் தேதிக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர்.பக்தர்கள் வசதிக்காக, 2014ம் ஆண்டு முதல், மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு, கல்யாண உற்சவம், தங்கத்தேர், வெள்ளித்தேர், கேடய உற்சவம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
விரைவு தரிசனம்: அதை தொடர்ந்து, 2016ம் ஆண்டு மூலவரை விரைவு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில், விற்பனை செய்யப்படும், 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் ஆன் லைன் வாயிலாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த வசதிக்கு முன், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது.குறிப்பாக முக்கிய விழாக்களின் போது சிறப்பு தரிசன டிக்கெட் வாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்தது. பக்தர்கள் தரிசன டிக்கெட், சேவா டிக்கெட், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்வதற்கு www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று சேவா டிக்கெட், அபிஷேகம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் தேவஸ்தான விடுதிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்நிலையில், 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன் லைன் வாயிலாக வழங்கும் சேவா டிக்கெட்டுகள், அபிஷேகம், சந்தன காப்பு போன்ற டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் பெறுவதற்கு மலைக்கோவிலுக்கு நேரில் வந்து பணம் கொடுத்து முன்பதிவு செய்து வருகின்றனர்.இதனால் பக்தர்கள் இருமுறை மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் வெளியூர் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் நலன் கருதி இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோவில் நிர்வாகம் மீண்டும் ஆன் லைன் மூலம் சேவா டிக்கெட், அபிஷேக டிக்கெட் வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடந்தன.இந்த நடைமுறை இம்மாதம், 15ம் தேதிக்குள் கொண்டு வரப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.22 மெஷின்கள்இது குறித்து திருத்தணி கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி கூறியதாவது:திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் சேவாக்கள், அபிஷேகம் மற்றும் தரிசன டிக்கெட்டுகள் ஆன் லைன் வாயிலாக இரண்டுஆண்டுகளுக்கு பின், அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும். இதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
மேலும், மலைக்கோவிலில் இதுநாள் வரை பணம் கொடுத்து தான் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது, டெபிட், கிரெடிட் கார்டுகள் மெஷின் வாயிலாக, மேற்கண்ட சேவா டிக்கெட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.இதற்காக ஹிந்து சமய அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து, 22 மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் தேவைப்பட்டால் கூடுதல் மெஷின்கள் வழங்குவதாகவும் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். தேவஸ்தான விடுதிகள், ஆன்லைன் முன்பதிவு விபரம்தேவஸ்தான விடுதி கட்டணம் விபரம் - ரூபாயில்குளிர்சாதன குடில் 1,500சாதாரண குடில் 800அறை 900 முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் சேவைகள் விபரம்சேவைகள், கட்டணம் - ரூபாயில்பஞ்சாமிர்த அபிஷேகம் 1,500பாலாபிஷேகம் 200சந்தனகாப்பு 4,000கல்யாண உற்சவம் 2,000தங்கத்தேர் 2,000வெள்ளித்தேர் 3,500வெள்ளி மயில் வாகனம் 3,500கேடய உற்சவம் 1,000தங்க கவசம் 500சகஸ்ரநாம அர்ச்சனை 400.