பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்கமன்னார் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, முதல் நாள் விக்னேஸ்வர ஆராதனை, மகா சங்கல்பம், தீப லட்சுமி பூஜை தீபாராதனை ஆகியன நடந்தன. இரண்டாம் நாள் வாஸ்து பூஜை, யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, மண்டல அர்ச்சனை நடந்தன. மாலை, 8:00 மணிக்கு, 108 கலச அபிஷேகம் நடந்தது. மூன்றாம் நாள் சீதாராமர், ஆண்டாள் சமேத ரங்கமன்னார் வேணுகோபால பெருமாள் கும்பாபிஷேகம், மூலஸ்தான அபிஷேகம் ஆகியன நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆண்டாள் நவநீத வெங்கட கிருஷ்ண பரிபாலன சபா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.