சூலூர்: செஞ்சேரி ஆதி கருவண்ண ராயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரியில் உள்ள ஆதி கருவண்ணராயர் பொம்மி தேவி கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜையுடன் துவங்கியது. முதல் கால ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம் மற்றும் மகா பூர்ணாகுதி நடந்தது. மேள, தாளத்துடன் புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்தன. 6;30 மணிக்கு ஆதி கருவண்ண ராயர், பொம்மி தேவிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.