அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே காஞ்சரம்பேட்டை அண்டமானில் செல்வ விநாயகர், கம்பளிக் கருப்புசாமி அய்யனார், கருப்பசாமி, முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 16ல் நடந்தது. இவ்விழாவின் 48வது நாள் நிறைவு மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று சிறப்பு யாக பூஜைகள், அபிஷேகம்நடந்தன. பக்தர்கள் வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துஇருந்தனர்.