திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ரூ.2 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளன.இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது மேல்பிரகாரம், கருவறை மண்டபம் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கு செடிகள் வளர்ந்ததால் விரிசல் பெரிதாகி மழை காலத்தில் தண்ணீர் உள்ளே இறங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார், தி.மு.க., ஒன்றியசெயலாளர் சரவணன் ஆகியோர் கோயிலை சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர்சேகர்பாபுவிடம் வலியுறுத்தினர்.இந்நிலையில் இக்கோயிலை ரூ.2 கோடியில் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு சமீபத்தில் அறிவித்தது.தேவஸ்தான செயல்அலுவலர் பாண்டியன் கூறுகையில், நிதி ஒதுக்கீட்டிற்கு பின் பணிகள் தொடங்கும், என்றார்.