பதிவு செய்த நாள்
07
மே
2022
09:05
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று அதிகாலை 4:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் நாளான நேற்று, பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் வீரராகவர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தார். மாலை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை, நாளை காலை 4:00 மணிக்கு நடக்கிறது.தேரோட்டம், வரும், 12ம் தேதி, காலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. வரும், 15ம் தேதியுடன், சித்திரை பிரம்மோற்சவம் நிறைவுபெறுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.