வில்லியனுார் : சத்குரு ராமபரதேசி சுவாமிகள் மகா குரு பூஜை விழா நேற்று நடந்தது. வில்லியனுார் மூலக்கடை எம்.ஜி.ஆர்., சிலை அருகே, சத்குரு ராமபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சுவாமிகளின் 155ம் ஆண்டு மகா குரு பூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலையில் சிறப்பு அபிேஷகமும், மாலையில் சுவாமிகளின் திருவுருவப்படம் வீதியுலாவும் நடந்தது.நேற்று காலை 6:00 மணியளவில், அரும்பார்த்தபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆன்மீக வழிபாட்டுச் சபையினரின் பாராயண நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபிேஷகமும், பூஜைகளும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம், பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை, சத்குரு ராமபரதேசி சுவாமிகள் சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.