பதிவு செய்த நாள்
07
மே
2022
10:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா நடந்தது. பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பொன்னர் சங்கர் கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி கடந்த , 24ம் தேதி முதல் நடக்கிறது.
விழாவையொட்டி, மாலை , 4:15 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மாலை , 5:15 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இரவு, 7:15 மணிக்கு அண்ணன்மார்சாமி கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி நடந்த து. தொடர்ந்து, பொன்னர், சங்கர், ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ பவளாயி திருக்கல்யாண பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. வேதபாராயணம், திருமுறைப்பாராயணம், எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவா ஜனம், கலச ஆவா ஹனம், செல்லாண்டியம்மன் பூஜை, ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருமாங்கல்ய தாரணம், பட்டாபிேஷகம், உபசர பூஜைகள் , மகா தீபாராதனை, திருவருட்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகத்தை, முனைவர் சீதாராமன், உடுமலை சிவா குழுவினர் நடத்தினர்.