பெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1005ம் ஆண்டு தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2022 03:05
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராமானுஜரின் ஆயிரத்து ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் பக்த ஜனசபா சார்பில் நேற்று முன்தினம் பகவத் ஸ்ரீராமாநூசரின் ஆயிரத்து ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு பெருமானுடன் ஏகாசனத்தில் ஸ்ரீராமாநுசர் திருமஞ்சனம் நடந்தது.முன்னதாக பெருமாள் மற்றும் ராமாநுசருக்கு பலவகையான திரவங்கள் கொண்டு சிறப்பு ஆபிஷேகம் நடந்தது.பின் ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் கட்சி அளித்தார். இதுப்போல் திருபட்டினம் வீழி வரதராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமானுஜர் 1005வது ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ ராமானுஜர் பிரகாரப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானம் சிறப்பாக செய்திருந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராமாநூசரை வழிப்பட்டனர்.