ஆன்மிகம் காட்டும் வழியில் செல்வது தான் அறிவியல். பூமி உருண்டையாக இருக்கிறது என்று முதலில் கூறியது ஆன்மிகம். அதை உறுதிப்படுத்திக் கொண்டது அறிவியல். இன்றைய அணுசக்திவரை எல்லாவற்றிற்குமே அடிப்படை ஆன்மிகம் தான். அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொருநாளும் நிலவொளி அதிகரித்துக் கொண்டே போகும். இதனை சுக்லபட்சம்(வெண்மையான இரவு) என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறை வளர்ந்து வரும் நாளில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது ஆன்மிகம். வளர்பிறையில் இறுக்கம் குறைந்து நம் மனம் தெளிவுடன் செயல்படும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. எச்செயலையும் தெளிவான புத்தியுடன் தொடங்குபவன் வெற்றி பெறுவது உறுதிதானே! ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.