பதிவு செய்த நாள்
10
மே
2022
05:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி, கடந்த 5ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
விழாவின் 5ம் நாளில், திருவோலக்க மண்டபத்தில் தன்னைத்தான பூஜித்தல் நடந்தது. இதில், மரகதலிங்கத்திற்கு பால், தேன், மஞ்சள், சந்தனம், பழம் போன்ற திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து. 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நாளான 7ம் நாள் விழாவில் அய்யாறப்பர் அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீதியுலாகாட்சியும், வரும் 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்