ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 05:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மட்டும் இன்று 10ம் தேதி ராமநவமி கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ராமர் அவதரித்தது சித்திரை மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரும் நவமி திதியில்.. புனர்பூசம் நட்சத்திரத்தில். இன்று தான் சித்திரை மாதம் சுக்ல பட்சம் நவமி திதி (அமாவாசைக்கு பிறகு வரும் நவமி). வைணவ சம்பிரதாயபடி திதி தான் கணக்கு . நட்சத்திரம் அல்ல. மேலும் ஸ்ரீரங்கத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தான் சித்திரை பிரம்மோற்சவம் முடிவடைந்தது. ஸ்ரீரங்கத்திற்கு என்று தனி பஞ்சாங்கம் உள்ளது. பாம்பு பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் மாதிரி. ஸ்ரீநம்பெருமாளுக்கு நடக்கும் உற்சவங்கள் தான் இங்கு பிரதானம். பொதுவாக பிற கோயில்களில் பங்குனி மாதத்தில் யுகாதி பண்டிகை (கலி யுகம் பிறப்பு) முடிந்த பின் வந்த நவமி திதியில் தான் கொண்டாடுவார்கள். அந்த வகையில் கடந்த (பங்குனி 27ம்தேதி. 10-04-2022 எல்லா கோயில்களிலும் ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது.