எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2022 08:05
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இக் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஏப்., 5 கொடி ஏற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தினமும் பெருமாள் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் மாலை 7:00 மணிக்கு பெருமாள் தாயாருடன் பூப்பல்லக்கில் வீதி வலம் நடந்தது. நாளை மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்று, மறுநாள் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். தொடர்ந்து வைகாசி பவுர்ணமி விழாவை யொட்டி மே 15 இரவு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார். எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்து வருகின்றனர்.