கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள் துதிக்கை உயர்த்தி வடக்கும் நாதர் கோவிலில் வணங்கி, உபசரித்து செல்லும் நிறைவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.