ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு வெள்ளி ராகு-கேது படகு காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2022 08:05
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஞானப்பிரசுனாம்பிகா சமேத வாயு லிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தி தென்கைலாயம் ஆக பெயர் பெற்று விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளுக்கு மிகவும் உகந்த இடமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இதனால் சர்ப்பதோஷ நிவாரண தலமாக ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானத்திற்கு சுமார் 9 லட்சம் மதிப்புள்ள வெள்ளியினால் தயார் செய்யப்பட்ட ராகு மற்றும் கேது நாக படகுகளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன(ஜி.எம்.ஆர்) உரிமையாளர் வெங்கட்ரமணா குடும்பத்தினர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு காணிக்கையாக சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலுவிடம் வழங்கினர் .இதனைத் தொடர்ந்து வெங்கட்ரமணா குடும்பத்தினருக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் . முன்னதாக ராகு-கேது சிறப்பு பூஜையில் ஈடுபட்டதோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்களால் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு பொன்னாடைப் போர்த்தி கோயிலின் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.