கோவை, : கோவை அம்மன்குளம் ராஜிவ்நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.கடந்த 3ம் தேதி துவங்கிய இந்த திருவிழாவில், பூச்சாட்டு, அக்னி சாட்டு, திருவிளக்கு பூஜை மற்றும் திருக்கல்யாணம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று விழாவின் சிறப்பு நிகழ்வான, சக்தி கரகம் எடுத்தல், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருளை பெற்றனர். இன்று, மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.