கோவை: கோவை லிங்கப்ப செட்டி வீதியில் உள்ள, ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று பண்ணாரி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மஞ்சள் முக தோற்றத்தில் காட்சி அளித்த அம்மனை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.