பழம்பெரும் துர்ககை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2022 11:05
பாலக்காடு: கேரளாவில் பரசுராமன் பிரதிஷ்டை நடத்தியது என்று கருதப்படும் துர்கை அம்மன் கோவில்களில் ஒன்றான பழம்பெரும் வள்ளூர் துர்கை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதூரில் பள்ளிப்புரம்-பட்டாம்பி ரயில் பாதையோரம் புல்காட்டில் மண்ணால் மூடிய நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிம்ஹ அறக்கட்டளை சேதமடைந்த கோவில்கள் கையகப்படுத்தி மறுவமைப்பதின் ஒரு பகுதியாக கேரளாவில் நடந்து வரும் ஆய்வின் இடையே வாய்வழி வரலாற்று அறக்கட்டளை இயக்குனர் (Oral history charitable trust) தினேஷ் என்பவர் கேரளா இழந்ததாக கருதிய துர்கை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்: புதூரைச் சேர்ந்த சத்திய நாராயணன் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் இக்கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடித்துள்ளோம். பரசுராமர் கேரளாவில் பிரதிஷ்டை நடத்திய 108 சிவாலயங்களில் குறித்து பழைமையான "ஸ்தோதிரத்தில் " வள்ளூர் துர்கை அம்மன் கோவிலை குறிப்பிட்டாலும் இக்கோவில் எங்கு உள்ளன என்று யாருக்குமே தெரியாமல் இருந்தனர். பருதூர் பஞ்சாயத்தில் 9ம் வார்டில் இக்கோவில் நிலை கொள்ளுகின்றன. பருதூரிலுள்ள பிரபலமான வள்ளூர் கால்வாய் தொடர்பு கொண்டு நடத்திய ஆய்வில் தான் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் இங்குள்ளதை அறிய முடிந்தன. இங்கிருந்து துவாரபாலகரின் சிலையும் திடப்பள்ளியின் இடிபாடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தற்போது கோவில் இடிபாடுகள் ரயில்வேயின் நிலத்தில் என்பதால் அங்கேயே வைக்கப்பட்டுள்ளனர். ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இக்கோவில் டிப்பு சுல்தானின் படை ஓட்ட காலத்தில் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் புல் காடாக திடந்திருந்த இப்பகுதி வழியாக மத்ராசுக்கு சரக்கு போக்குவரத்து எளிதிலாக்க திருரூரில் இருந்து போத்தனூர் வரை ஆங்கிலேயர் ரயில் பாதை கட்டியமைப்பட்டனர். இது தொடர்பு கொண்டு கூடுதல் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் இடிபாடுகள் கண்ட பகுதியிலேயே கோவில் புனரமைக்க முயற்ச்சிப்போம். கடந்த நான்கு ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் கோவிகளின் வரலாறு பதிவு செய்வதற்கான பயணம் நடத்தியதில் 150 சேதமடைந்த கோவில்கள் கண்டுபிடிக்க முடிந்தன. கண்டுபிடித்த கோவில்களில் திருன்னாவாய தளி மகாதேவர் கோவில், தலக்காடு அனந்தபத்மநாப சுவாமி கோவில், பரப்பநாடு தளி மகாதேவர் கோவில் ஆகியவை கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.