Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: வைகாசி மாத பலன் மிதுனம் : வைகாசி மாத பலன் மிதுனம் : வைகாசி மாத பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
ரிஷபம் : வைகாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : வைகாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

14 மே
2022
11:05

கார்த்திகை - 2, 3, 4: குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் உடல் அசதி குறையும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில்லறை சண்டைகள் தீரும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் வகையில் இருந்து வந்த இறுக்கம் மாறும். பெண்களுக்கு கவனமாக பேசி பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
சந்திராஷ்டம தினம்: மே 18, 19
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 5, 6

ரோகிணி: தனித்தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய உங்களுக்கு இந்த மாதம் உங்களுடைய ஆளுமைத்திறனால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தந்தையாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. வியாபாரம் நிமித்தமாக வெளிநாட்டு பயணம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். குருவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளின் நடத்தையால் சந்தோஷம் ஏற்படும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். அரசியல் துறையினருக்கு மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனகசப்பு மாறும்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
சந்திராஷ்டம தினம்: மே 19
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 5, 6

மிருகசீரிடம் - 1, 2: எதையும் கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய உங்களுக்கு இந்த மாதம் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் உங்களுக்கான வாதம் சரியான முறையில் எடுத்து வைப்பீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். மன குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.
சந்திராஷ்டம தினம்: மே 19, 20
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 6, 7

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar