திருவண்ணாமலையில் வசந்த உற்சவம் நிறைவு : அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2022 05:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ நிறைவையொட்டி, அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில், அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில், அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அய்யங்குளக்கரை மண்டபத்தில் பராசக்தியம்மன் , உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.