பதிவு செய்த நாள்
15
மே
2022
10:05
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 6:00 மணிக்கு நடக்கிறது. சின்னதடாகம் அருகே வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் கிராமம் அழகர் நகரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு விக்கிரகங்கள் பட்டினப்பிரவேசம் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, வேத பாராயணம், திவ்ய பிரபந்தம் தொடக்கம், சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை வேதபாராயணம், மதியம், 2:00 மணிக்கு மேல் புதிய விக்ரகங்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, வேத பாராயணம், ஹோமம், சாற்றுமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இன்று காலை, 6:00 மணி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு மேல் சிறப்பு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வரப்பாளையம் அழகர் நகர் கோவில் நிர்வாக திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.