ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் தெருவில் பிராமண இளைஞர் இறைப்பணி குழு சார்பில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்காரம் ராஜகோபால் பட்டர், ராமசாமி தலைமையில் லட்சார்ச்சனை வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.