வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி லிங்கம்மாள் கோயில் பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. குட்லாடம்பட்டி பெருமாள் சுவாமி கோயில் வீட்டிலிருந்து சாமியாடிகள் பெட்டி எடுத்து லிங்கம்மாள் கோயிலுக்கு வந்தனர். பானையுடன் ஊர்வலமாக வந்த பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறுபது வீட்டு பங்காளிகள் செய்தனர்.