பதிவு செய்த நாள்
17
மே
2022
06:05
கோவில்பாளையம்: கொங்கலம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவம் வரும் 19ம் தேதி நடக்கிறது.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் புதூரில், பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 11ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது, அன்று காப்புக் கட்டுதல், பூவோடு வைத்தல் ஆகியவை நடந்தன. 16ம் தேதி வரை, தினமும் மாலையில், கம்பம் சுற்றி பக்தர்கள் ஆடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. நாளை (18ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, அணிக்கூடை எடுத்தலும், இரவு 12:00 மணிக்கு, சக்தி கரகம் எடுத்தலும் நடக்கிறது. வருகிற 19ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், இதையடுத்து அடி அளந்து கொடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல், தேர் இழுக்கும் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.