திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் வைகாசி விசாக அன்னதானம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியை நிகேதன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் நித்யானந்த கிரி சுவாமிகள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சுவாமினி பிரபவானந்த சரஸ்வதி, சுவாமி ராமானந்தகிரி முன்னின்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகேதன் ஊழியர்கள் செய்திருந்தனர்.