குன்னத்தூர் பொன்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2022 03:05
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் புகழ் பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 4 ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 18 ந் தேதி நேற்று காலை அம்மை அழைத்தல், தொடர்ந்து, குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று 19 ந் தேதி அதிகாலை பாரியூர் அம்மன் அழைத்து வருதலை தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, 11 மணிக்கு ரத ஆரோகணம், மாலை 4 மணிக்கு ரத உற்சவம் உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. 20 ந் தேதி தேர் நிலை சேருதல், 21 ந் தேதி அம்மன் அலங்கார முத்து பல்லக்கில் திரு வீதி உலா வருதல், 22 ந் தேதி பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா வருதல், 23 ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 24 ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.