தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2022 10:05
தஞ்சாவூர் : தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நேற்று 22ம் தேதி குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது. குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாமில் சுவாமி விவேகானந்தரின் வரலாறு, Super Brain Yoga, வீடியோ பார்த்து விவேகம் சொல்லு, யோகாசனம் போன்றவற்றுடன் 50 குழந்தைகள் குதூகலித்தன. 28 ம்தேதி வரை ஒரு வாரம் குழந்தைகளுக்கான புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. காலை 9மணி முதல் 12மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பை திவாஸ் ரோட்டரி மகளிர் சங்கத்துடன் இணைந்து தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் வழங்குகிறது. 7 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம்.