அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை, அங்கிருந்த அரக்கிகள் துன்புறுத்தினாலும் விபீஷணனின் மகளான திரிசடை மட்டும் ஆதரவாக இருந்தாள். ஒருநாள் சீதையின் காதருகில் வண்டு ஒன்று ரீங்காரம் இட்டுச் சென்றதைக் கண்ட அவள், “அம்மா! அந்த வண்டு உங்கள் காதருகே வந்து ஏதாவது நல்ல சேதி சொன்னதா! என்னைப் பொறுத்தவரை இது நல்ல சகுனம். உங்களுக்கு விடிவு காலம் நெருங்குவதை உணர்கிறேன்” என்றாள். இதைக் கேட்ட சீதை, “உன் பேச்சு என் காதில் தேன் போல பாய்கிறது. மனதுக்கு நலம் தருகிறது” என்றாள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் போதும். அவர்களின் மனதில் நம்பிக்கை துளிர் விடும்.