Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேதி சொல்லிய வண்டு யாரிடம் இருந்து நீ கற்பாய்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பார்த்தேன்...படித்தேன்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
02:05


யது என்ற மன்னர் வேட்டைக்காக காட்டுக்குள் சென்ற போது தத்தாத்ரேயரைக் கண்டார். கவலை என்பதையே அறியாதவராக சிரித்த முகத்துடன் காணப்பட்டார். நெருங்கிய மன்னர், ‘சுவாமி! தாங்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணம் என்ன?’’ எனக் கேட்டார்.

‘எனக்கு 24 குருநாதர்கள் உள்ளனர். அவர்களால் தான் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்’ என பதிலளித்தார் தத்தாத்ரேயர்.

ஆச்சரியம் கொண்ட மன்னர். ‘‘சுவாமி! ஒரு மனிதனுக்கு ஒரு குருநாதர் தானே இருக்க முடியும்? தங்களின் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறதே’ என்றார்.

‘பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம், நிலா, சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் தாசி, குரரம் என்னும் பறவை, சிறுவன், ஆயுதம் தயாரிப்பவன், சிறுமி, பாம்பு, சிலந்தி, புழு ஆகியோர் என் குருநாதர்கள்’ என்றார் தத்தாத்ரேயர். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘மன்னா! என் விளக்கத்தை கேட்டால் உண்மை புரியும். பூமியிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன். துாய்மையை நீரிடம் தெரிந்து கொண்டேன். யாருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்று உணர்த்தியது. எப்போதும் பிரகாசமுடன் இருக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; மனம் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
 வளர்பிறை முடிவில் பவுர்ணமியாகவும், தேய்பிறை முடிவில் அமாவாசையாகவும் மாறினாலும் நிலா ஒன்று தானே.  அதுபோல இளமை, முதுமை என மாறுபாடுகள் வந்தாலும் அவை உடலுக்கே அன்றி உயிருக்கு அல்ல என்பதை உணர்ந்தேன். ஒரே ஒரு சூரியன் இருந்தாலும் அது தண்ணீரில் பலவாக பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

வேடன் ஒருவன் புறாக் குஞ்சுகளை வலைவிரித்துப் பிடித்தான். அவற்றின் மீது பாசம் கொண்ட தாய்ப்புறா தானும் வலிய வந்து அவனிடம் சிக்கியது. இதில் இருந்து துன்பத்திற்கு காரணம் பாசம் என்பதை அறிந்தேன்.

எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் இரையை ஏற்பது போல, கிடைப்பதை உண்டு வாழ வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் மனதை ஓரிடத்தில் செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

தேனீக்கள், பூக்களிடம் இருந்து தேனைப் பெறுவது போல, துறவிகளும் உணவை யாசகமாக பெற வேண்டும். அதே நேரம் அவற்றைப் போல உணவை சேர்த்து வைத்து பறி கொடுக்காமல், தேவையானதை அன்றாடம் பெற வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

குழிக்குள் விழுந்த பெண் யானையைக் கண்ட ஆண் யானை, அதன்மீது ஆசை கொண்டு தானுவும் குழியில் வீழ்ந்தது. இதிலிருந்து பெண்ணாசை துன்பத்துக்கு ஆளாக்கும் என்பதை உணர்ந்தேன்.

தேனீக்கள் சேகரித்த தேனை, தேன் சேகரிப்பவன் அபகரித்துச் செல்கிறான். இதிலிருந்து அபரிமிதமாக சேர்த்த பொருள் அபகரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன்.

ஓடுவதில் சிறந்தது மான், அது இசையைக் கேட்க நேர்ந்தால் மயங்கி விடும். அப்போது கொடிய விலங்குகள் அதை இரையாக்கி கொள்ளும். எனவே இசை, நடனத்தில் மனிதன் நாட்டம் கொள்ளக்கூடாது என உணர்ந்தேன்.

நாவை அடக்க முடியாததால் வரும் சபலத்தால், துாண்டிலில் மீன்கள் சிக்கும். எனவே நாவை அடக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றேன்.

பிங்களா என்ற நாட்டியக்காரி தன்னை நாடி வந்தவர்களின் மூலம் வருமானம் பெற்றாள். பின்னர் கிடைத்தது போதும் என்று நிம்மதியாக துாங்குவதைக் கண்டேன். அவளிடம் இருந்து ஆசையை விட்டால் திருப்தி ஏற்படும் என்பது புரிந்தது.

குரரம் என்பது ஒரு சிறுபறவை. அது துாக்கிச் செல்லும் மாமிசத்தை மற்ற பெரிய பறவைகள் பறிக்க வந்தால், உணவை  கீழே போட்டு விடும். பெரிய பறவையும் அதை துரத்தாமல் மாமிசத்தை நாடிச் செல்லும். ஆசையைக் கைவிட்டால்  துன்பம் நெருங்காது என்பதைக் கற்றேன்.

சிறுவனின் மனம்  இன்பம், துன்பத்திலும் சிக்கிக் கொள்வதில்லை. ஒருவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எந்த மனநிலையிலும் பொருட்படுத்துவதில்லை. அதே மனம் நமக்கும் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.
ஆயுதம் செய்பவனின் மனஒருமைப்பாடு வியக்கத்தக்கது. அருகில் நடப்பதை பொருட்படுத்தாமல் ஆயுதத்தை முழுமைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவான். அவனிடம் இருந்து மன ஒருமைப்பாட்டைக் கற்றேன்.

சிறுமி ஒருத்தி அணிந்திருந்த இரு வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழும்பியது. அதில் ஒன்றைக் கழற்றியதும் சப்தம் அடங்கியது. இதன் மூலம் இரண்டு நபர் சேர்ந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதை அறிந்து, தனிமையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.


அழியும் இந்த உடலுக்காக பாம்பு தனக்கென வீடு கட்டிக் கொள்வதில்லை. அதுபோல ஞான வாழ்வில் ஈடுபடுவோரும்  வீடு கட்டக் கூடாது என்பதை பாம்பிடம் கற்றேன்.

சிலந்தி வலை பின்னி அதில் வாழும். இறுதியில் வலையைத் தானே விழுங்கி விடும். அதுபோலவே கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி  பின்னர் ஊழிக் காலத்தில் தன்னுள் அடக்கிக் கொள்கிறார் என்பதை அறிந்தேன்.

கூட்டில் தங்கியிருக்கும் புழுவானது எப்போதும் குளவியையே சிந்தித்து தானும் அதுவாக மாறி விடும். இதன் மூலம்  எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதுவாகவே மாறும் குணம் மனிதனுக்கு உண்டு என்பதை உணர்ந்தேன்.

இந்த 24 பேரும் தான் என்னுடைய குருநாதர்கள்’’ என்றார் தத்தாத்ரேயர்.
உண்மையை உணர்ந்த யது மன்னரும் ஆன்மிக தேடலுடன் காட்டில் தவமிருக்கத் தொடங்கினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar